Sunday, 19 December 2010

Exercise with Laughing Club.

வணக்கம்

நான் எழுதுவது என்னவென்றால் நாங்கள் செய்யும் உடற்பயிற்சி யும்  சிரிப்பும்.

நம்  உடலும்  உள்ளமும் தூய்மையாகவும் ,ஆரோக்கியமாகவும்  இருக்க உடற்பயற்சி மிகவும்  அவசியம் . அத்துடன் நம் அன்றாட கவலையை மறந்து சிரித்துக்கொண்டே ஒவ்வோர் உடற்பயர்சியும்  செய்தால் இரட்டிப்பு  பலன் பெறலாம் . 

இதை  மனதில் வைத்துக்கொண்டு  எங்கள்  காலனியில் (Pailayout Bangalore ). இரண்டு வருடங்களுக்கு  முன்பு  சுமார் 20-25 மெம்பர்கள்  சேர்ந்து  Laughing with exercise club தொடங்கி வாரத்தில்  5 நாட்கள் (except Sat Sun ) தினசரி மாலை 5 to 6 வரை  1 மணிநேரம் தொடர்ந்து  நடைபெற்று  வருவது  சந்தோஷ சமாசாரம். நானும்  என்கணவரும் என்மகள் வீட்டிற்கு    சென்ற சமயம்  ஒரு குஜராத்தி  தகுந்த  முறையில்  எங்களுக்கு சொல்லிக்கொடுத்து ஒரு  வார பயர்ச்சியும்  கொடுத்து  ஒரு  copy யும்  கொடுத்தார் .   
    
அதன்படி  முதலில்  ஓம்காரத்தில் தொடங்கி  நம் உறுப்புக்களான  தலை , கண் , கழுத்து ,  தோள்ப்பட்டை ,  கை ,  விரல்கள் , இடுப்பு , வயிறு , மூட்டு , கால்கள் , பாதம்  என்று  எல்லா  உறுப்புகள்க்கும் உடற்பயற்சி  செய்து எல்லாவற்றின்  முடிவிலும் இயற்கையாகவே  சொந்த  அனுபவங்களை  சொல்லி  சிரித்து  மகிழ்வோம் . எல்லாவிதமான  உடற்பயற்சிக்கும்  தகுந்த பலன் உண்டு .
   
நடுவில்  Lion laugh , Dog laugh , Hanuman laugh , Mobile laugh , Friendship laugh , Appreciation laugh , Mistake laugh ,Jhoola laugh , Coffee laugh , Arrow laugh , Punishment laugh , Silent laugh , என்று  பலவிதமான சிரிப்புக்கள்  ஏற்படும்போது  நம் மனம் நம்மை  அறியாமல் லேசாகி  விடுகிறது .  மனக்கவலைகள்  மறந்து  மனம் மகிழ்ச்சி  அடைகிறது . சுமார் 30  விதமான  உடற்பயர்ச்சிகள்  செய்கிறோம் . இரு கைகளை தட்டுவதால் ( 100 times  ) ஏற்படும்  பலன்கள் ஏராளம்.  மற்றும்  Pressing , Bremerry , Acupressure , Dance , என்று செய்வதால்  ஆரோக்கியம்  கிடைக்கிறது . ஒருத்தருக்கொருத்தர்  மனதில் உள்ளவற்றை சொல்லிக்கொண்டு  சிரித்துக்கொண்டே எங்கள்  Laughters  club  தினசரி  அருமையாக  கழிகிறது . இதனால்  BP , sugar , knee pain , Sleepless , Laziness , என்று  வந்தவர்கள்  நல்லமுறையில்  பயனடைந்து  சுறுசுறுப்பாகி விட்டார்கள்  என்பது மகிழ்ச்சிகரமான  சமாசாரம் .
      
 முடிவில்  எல்லாவருமாக  சேர்ந்து aksharmala laugh  செய்து  நம்  மனதில் Positive  நினைப்புகளை  வளர்த்து  நம்மிடமுள்ள  Ego , Anger , Worries , Jealousy , Problems Tension ,Depression , Negative thoughts , & all  other  Diseases  எல்லாவற்றையும் Imaginary fire  பண்ணிவிட்டு  நாம் Free  ஆகி  விடுவோம் .
       
 அதன்பின் 2 mts இடதுகை  ஆகாயத்தை  நோக்கியும் ( அதாவது  நல்ல  ஆரோக்கியம் , நிறைவான  சந்தோஷத்தை எடுத்துக்கொண்டும் ) வலதுகை  பூமியை  பார்த்தும்  ( நம் எதிர்மறை  நினைப்புகள் , நம் பிரச்னைகள் , நம்  வியாதிகள்  இவற்றை  பூமியை  நோக்கி  எறிந்தும் ) நம்முடைய உன்னதமான  உள்ளத்தை  அமைதியாகவும்  சந்தோஷமாகவும்  வைத்துக்கொண்டு  லோக க்ஷேமத்திற்காக  " சர்வே  ஜனா  சுகினோ  பவந்து " என்று  3 தடவை  கூறி பிரார்த்தனை  செய்து  ஒம்காரத்துடன்  முடித்துக்கொள்வோம் .

"வாய்  விட்டு  சிரித்தால்  நோய்  விட்டு ப் போகும் ."

Finally  we  should  say    we  are  the  Best  Person  in the  world . we  are  the  Happiest  Person  in the  world . We  are  the  Healthiest  Person  in the  world .

 One , Two , Three , Laughing  is  Free .
East  or  West  Laughing  is  the  Best .
 Young  or  Old  Laughing  is  the  Gold . 
Hasan  mukhi  sadhaa  sukhi .
                                                      -----------------------------------------
                                                      
        










  .  

3 comments:

  1. Ganga mami..Wonderful!
    Ask Mama also to join you people and do regularly :-)

    ReplyDelete
  2. Fully agree with you mridula....we hv failed in convincing him..

    ReplyDelete
  3. video kooda podalam all will be benefited after seeing your laughing video from the begining to end

    ReplyDelete