வணக்கம்
நம் உடலும் உள்ளமும் தூய்மையாகவும் ,ஆரோக்கியமாகவும் இருக்க உடற்பயற்சி மிகவும் அவசியம் . அத்துடன் நம் அன்றாட கவலையை மறந்து சிரித்துக்கொண்டே ஒவ்வோர் உடற்பயர்சியும் செய்தால் இரட்டிப்பு பலன் பெறலாம் .
இதை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் காலனியில் (Pailayout Bangalore ). இரண்டு வருடங்களுக்கு முன்பு சுமார் 20-25 மெம்பர்கள் சேர்ந்து Laughing with exercise club தொடங்கி வாரத்தில் 5 நாட்கள் (except Sat Sun ) தினசரி மாலை 5 to 6 வரை 1 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்று வருவது சந்தோஷ சமாசாரம். நானும் என்கணவரும் என்மகள் வீட்டிற்கு சென்ற சமயம் ஒரு குஜராத்தி தகுந்த முறையில் எங்களுக்கு சொல்லிக்கொடுத்து ஒரு வார பயர்ச்சியும் கொடுத்து ஒரு copy யும் கொடுத்தார் .
அதன்படி முதலில் ஓம்காரத்தில் தொடங்கி நம் உறுப்புக்களான தலை , கண் , கழுத்து , தோள்ப்பட்டை , கை , விரல்கள் , இடுப்பு , வயிறு , மூட்டு , கால்கள் , பாதம் என்று எல்லா உறுப்புகள்க்கும் உடற்பயற்சி செய்து எல்லாவற்றின் முடிவிலும் இயற்கையாகவே சொந்த அனுபவங்களை சொல்லி சிரித்து மகிழ்வோம் . எல்லாவிதமான உடற்பயற்சிக்கும் தகுந்த பலன் உண்டு .
நடுவில் Lion laugh , Dog laugh , Hanuman laugh , Mobile laugh , Friendship laugh , Appreciation laugh , Mistake laugh ,Jhoola laugh , Coffee laugh , Arrow laugh , Punishment laugh , Silent laugh , என்று பலவிதமான சிரிப்புக்கள் ஏற்படும்போது நம் மனம் நம்மை அறியாமல் லேசாகி விடுகிறது . மனக்கவலைகள் மறந்து மனம் மகிழ்ச்சி அடைகிறது . சுமார் 30 விதமான உடற்பயர்ச்சிகள் செய்கிறோம் . இரு கைகளை தட்டுவதால் ( 100 times ) ஏற்படும் பலன்கள் ஏராளம். மற்றும் Pressing , Bremerry , Acupressure , Dance , என்று செய்வதால் ஆரோக்கியம் கிடைக்கிறது . ஒருத்தருக்கொருத்தர் மனதில் உள்ளவற்றை சொல்லிக்கொண்டு சிரித்துக்கொண்டே எங்கள் Laughters club தினசரி அருமையாக கழிகிறது . இதனால் BP , sugar , knee pain , Sleepless , Laziness , என்று வந்தவர்கள் நல்லமுறையில் பயனடைந்து சுறுசுறுப்பாகி விட்டார்கள் என்பது மகிழ்ச்சிகரமான சமாசாரம் .
முடிவில் எல்லாவருமாக சேர்ந்து aksharmala laugh செய்து நம் மனதில் Positive நினைப்புகளை வளர்த்து நம்மிடமுள்ள Ego , Anger , Worries , Jealousy , Problems Tension ,Depression , Negative thoughts , & all other Diseases எல்லாவற்றையும் Imaginary fire பண்ணிவிட்டு நாம் Free ஆகி விடுவோம் .
அதன்பின் 2 mts இடதுகை ஆகாயத்தை நோக்கியும் ( அதாவது நல்ல ஆரோக்கியம் , நிறைவான சந்தோஷத்தை எடுத்துக்கொண்டும் ) வலதுகை பூமியை பார்த்தும் ( நம் எதிர்மறை நினைப்புகள் , நம் பிரச்னைகள் , நம் வியாதிகள் இவற்றை பூமியை நோக்கி எறிந்தும் ) நம்முடைய உன்னதமான உள்ளத்தை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொண்டு லோக க்ஷேமத்திற்காக " சர்வே ஜனா சுகினோ பவந்து " என்று 3 தடவை கூறி பிரார்த்தனை செய்து ஒம்காரத்துடன் முடித்துக்கொள்வோம் .
"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு ப் போகும் ."
Finally we should say we are the Best Person in the world . we are the Happiest Person in the world . We are the Healthiest Person in the world .
One , Two , Three , Laughing is Free .
East or West Laughing is the Best .
Young or Old Laughing is the Gold .
Hasan mukhi sadhaa sukhi .
-----------------------------------------.